அவுஸ்திரேலியமுரசு

ஆ‌ஷஸ் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா

ஆ‌ஷஸ் தொடரில் பங்கேற்று இருந்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளும் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 5-ந் தேதி சிட்னியில் தொடங்குகிறது. இந்த நிலையில் ஆ‌ஷஸ் தொடரில் பங்கேற்று இருந்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா ...

Read More »

ஆஸ்திரேலிய புலம்பெயர்வு திட்டத்தை ஆராயும் புலம்பெயர்வு நிலைக்குழு

பிப்ரவரி 2021: ஆஸ்திரேலியாவுக்கு பொருளாதார மட்டத்தில் முக்கிய பங்களிப்பைச் செலுத்தும் பட்டியலில் திறன்வாய்ந்த குடியேறிகள் முதன்மையானவர்களாக இருக்கின்றனர். கொரோனா பெருந்தொற்று சூழலுக்கு முன்னதாக, ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் குடியேறிகள் திறன்வாய்ந்த புலம்பெயர்வு திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவுக்குள் சென்றிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் உழைப்புச்சக்தியில் ஏற்படும் இடைவெளியை நிரப்பும் இடத்தில் குடியேறிகல் இருக்கின்றனர். இந்த சூழலில், திறன்வாய்ந்த புலம்பெயர்வு திட்டம் தொடர்பான ஆராய்வை புலம்பெயர்வுக்கான கூட்டு நிலைக்குழு மேற்கொண்டுள்ளது. “திறன்வாய்ந்தவர்கள் புலம்பெயர்வது ஆஸ்திரேலியாவின் தற்போதைய தேவைகளையும் வருங்கால தேவைகளையும் எவ்வாறு பூர்த்தி செய்கிறது என்பதை கருத்தில் கொள்ள ...

Read More »

ஆஸ்திரேலியாவில் ஒமைக்ரானுக்கு முதல் பலி

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1,999 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் 3 பேர் பலியாகி உள்ளனர். ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மேற்கு சிட்னி முதியோர் பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருந்த 80 வயதுள்ள முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு ஒமைக்ரான் உறுதியானது. இதையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று பலியானார். இது ஆஸ்திரேலியாவில் ஒமைக்ரானக்கு ஏற்பட்ட முதல் ...

Read More »

இனப்படுகொலையில் இருந்து தப்ப மக்கள் வெளியேறுகிறார்கள், காக்க வேண்டியது ஆஸ்திரேலியாவின் கடமை’- தமிழ் செயற்பாட்டாளர்

“(ஆஸ்திரேலியாவின்) இந்த உணர்வற்ற செயலை கேட்பதற்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இஇமபடுகொலையில் இருந்து தப்ப மக்கள் வெளியேறுகிறார்கள். இம்மக்கள் நிஜமான மனித உயிர்கள், வீடியோ கேம் அல்ல. அவர்களுக்கு உதவ வேண்டியது, ஆபத்தான சூழலுக்கு திருப்பி அனுப்பாமல் இருக்க வேண்டியது ஆஸ்திரேலியாவின் கடமை. இந்த கொடூரமான கொள்கைகள் முடிவுக்கு வர வேண்டும்,” என பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தமிழ் செயற்பாட்டாளர் தமிழ் கார்டியன் ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார். தமிழர்கள் தொடர்ந்து இலங்கையிலிருந்து வெளியேறி வரும் நிலையில் இப்படியொரு பிரச்சார செயலை ஆஸ்திரேலியா இலங்கையுடன் இணைந்து ...

Read More »

ஆஸ்திரேலியா அறிவித்துள்ள புதிய திட்டமூடாக அகதிகளை குடியமர்த்துவது எப்படி?

ஆஸ்திரேலியாவில் அகதிகளை குடியமர்த்தும்வகையில், CRISP என அழைக்கப்படும் Community Refugee Integration and Settlement Pilot என்ற செயற்றிட்டமொன்றை, பரீட்சார்த்த அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா இணக்கம் தெரிவித்துள்ளது.

Read More »

சிட்னி விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

சிட்னி விமான நிலையத்தில் சுங்கப் பணியாளராக பணிபுரிந்த இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆன்டனி அப்பாத்துரை ஒரு பாரிஸ்டாவைக் காதலிப்பதாகக் கூறி, அவளது ஆடைகளைப் பிடித்து இழுத்து, முத்தமிட முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 73 வயதான குற்றவாளி, ஆகஸ்டில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இவ்வாறான முறைகேடான நடத்தையில் ஈடுபட்டமைக்காக 2022 டிசம்பர் 2022 வரை சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Read More »

ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை மீள்குடியமர்த்த உதவி…

Operation #NotForgotten எனும் பிரச்சார செயலின் மூலம் அகதிகளுக்கு ஆஸ்திரேலிய அகதி கவுன்சில், MOSAIC, Ads Up Canada Refugee Network ஆகிய அமைப்புகள் ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் மீள்குடியமர உதவி வருகின்றன. கடந்த 2019ம் ஆண்டு முதல் பப்பு நியூ கினியா அல்லது நவுருத்தீவில் வைக்கப்பட்டிருந்த 157 அகதிகள் சார்பாக கனடாவில் மீள்குடியமர்த்த விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இந்த கனடா மீள்குடியமர்வு என்பது ஆஸ்திரேலிய- அமெரிக்க அகதிகள் ஒப்பந்தத்தில் விடுப்பட்ட அகதிகளுக்கு நிரந்தரமான வாழ்க்கையை தரும் பெரும் வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

Read More »

நாளை சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்படும்- ஆஸ்திரேலிய பிரதமர் உறுதி

• நாளை டிசம்பர் 15 முதல் சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் என்பதை ஆஸ்திரேலிய பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார். • நியூ சவுத் மாநிலத்தில் கடந்த 10 வாரங்களில் இல்லாதளவுக்கு அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நாளை, டிசம்பர் 15 முதல் கோவிட் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு மாநிலம் தயாராக உள்ளது. • விக்டோரியாவில் mRNA தடுப்பூசி தயாரிப்பு மையத்தை உருவாக்குவதாக பிரதமர் Scott Morrison அறிவித்துள்ளார்.

Read More »

அவுஸ்திரேலியா – தென் கொரியா இடைய 717 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு ஒப்பந்தம்

அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் ஆகியோர் 717 மில்லியன் அமெரிக்க டொலர் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். சுமார் 1 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் பெறுமதியான இந்த ஒப்பந்தம் திங்களன்று கான்பெர்ராவிற்கான மூனின் நான்கு நாள் பயணத்தின் போது கைச்சாத்திடப்பட்டது. கொவிட் தொற்றுநோய் தொடங்கிய பின்னர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் தென் கொரிய ஜனாதிபதி ஆவார். புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் தென் கொரிய பாதுகாப்பு நிறுவனமான ‘Hanwha’ அவுஸ்திரேலியா இராணுவத்திற்கு பீரங்கி ஆயுதங்கள், ...

Read More »

தஞ்சம் கோரியவர்களை ஆஸ்திரேலிய அரசு நடத்திய விதத்தால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகியுள்ள முன்னாள் கடற்படை மாலுமி

ஆஸ்திரேலியாவின் கடல் பகுதியில் உயிரிழந்த இந்தோனேசிய மற்றும் சோமாலிய தஞ்சக்கோரிக்கையாளர்களின் உடல்களை மீட்டெடுக்க வேண்டிய பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய கடற்படையின் முன்னாள் மாலுமி ஒருவர், 10 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த மோசமான நினைவுகளால் துன்புறுவதாகத் தெரிவித்திருக்கிறார். அகதிகளின் நிலையையும் துன்பத்தையும் அவர்களை ஆஸ்திரேலிய அரசு நடத்திய விதத்தையும் கண்ட பிறகு, தஞ்சம் கோருபவர்கள் பற்றி தனது மனப்பான்மை முழுமையாக மாறிவிட்டதாக அந்த மாலுமி குறிப்பிட்டிருக்கிறார்.

Read More »