Home / செய்திமுரசு / நிகழ்வுமுரசு (page 2)

நிகழ்வுமுரசு

ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் நூல் வெளியீடு

Nalini's Book Release_Melb 02

முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான திருமதி நளினி முருகன் அவர்களின் முழுமையான அனுபவங்களை உள்ளடக்கியதான எழுத்தாளர் திரு பா. ஏகலைவன் எழுத்துருவாக்கம் செய்த “ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்” என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டுவிழா கடந்த 17-04-2017 திங்கட்கிழமையன்று மாலை 4.00 மணியளவில் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ணில், டன்டினோங் நகரத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வை தமிழ் ஏதிலிகள் கழகம் ஏற்பாடு ...

Read More »

தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் 2017 – மெல்பேர்ண்

unnamed (5)

பாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகரில் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில்  19-03-1988 முதல் 19-04-1988 வரையான முப்பதுநாட்கள் உண்ணாநோன்பிருந்து ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 29-வதுஆண்டு நினைவுநாளும் தாயக விடுதலைப் போராட்டத்தில் பின்புலமாக உழைத்து சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர்களையும் நினைவு கூருகின்ற நாட்டுப்பற்றாளர் நினைவுநாள் இவ்வாண்டும் விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ணில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. குடும்பவாழ்வியலில் ஈடுபட்டிருந்தபோதும் இடர்மிகுந்த நெடிய தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் உறுதுணையாக ...

Read More »

தமிழீழ செயற்பாட்டாளர் ட்ரெவர் கிறான்ட் வணக்க நிகழ்வு!- அவுஸ்ரேலியா

IMG_1840-e1489204701423

அண்மையில் சாவடைந்த தமிழீழச் செயற்பாட்டாளர் ட்ரெவர் கிறான்ட் அவர்களின் வணக்கநிகழ்வு ஜெனிவாவில் முக்கிய உலகத்தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து நடத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 10 – 03 – 2017 அன்று உள்ளுர் நேரப்படி மாலை ஆறு மணிக்கு மொன்பிறில்லியன்ற் என்ற மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. பொதுச்சுடரினை வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் ஈகச்சுடரினை மாவீரர்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராலும் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தமிழ்ச்செயற்பாட்டாளர்கள்ட்றெவர் கிறான்ட் தொடர்பான நினைவுரைகளை ஆற்றினார்கள். மன்னார் சிவில் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற எஸ்.ஜி.சாந்தனின் வணக்கநிகழ்வு

S G Santhan Tribute 2017_SYDNEY 01

கடந்த 26 02 2017அன்று சுகயீனம் காரணமாக சாவடைந்த ஈழத்துப்பாடகர் சிம்மக்குரலோன் எஸ். ஜி. சாந்தன் அவர்களுக்கான வணக்கநிகழ்வு ஒஸ்ரேலியாவில் மெல்பேர்ண் நகரத்தில் 05-03-2017 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 4.15மணியளவில் Vermont South Community House மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு.வசந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எஸ். ஜி. சாந்தன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மெல்பேர்ணில் மிக நீண்டகாலமாக இசைத்துறையோடு பயணித்துக் கொண்டிருக்கின்ற திரு செல்லையா ...

Read More »

பிரிஸ்பேனில் புரந்தரதாஸர் ஆராதனை விழா!

morepic_5038569

பிரிஸ்பேன் ( அவுஸ்ரேலியா )  ஸ்ரீ ராகவேந்திரா பக்தி மண்டலி ஏற்பாடு செய்திருந்த புரந்தரதாஸர் ஆராதனை விழா, பிரிஸ்பேன் க்ரிபித் பல்கலைக்கழக நாதன் வளாகத்தில் உள்ள மல்டி பெய்த் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆராதனை இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆராதனையில் சிறியவர் முதல் பெரியவர் வரை புரந்தரதாஸரின் கீர்த்தனைகளை பாடி அவரை நினைவு கூர்ந்தனர். கர்நாடக இசை பிரியர்களும் ரசிகர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்புற செய்தனர். இறுதியில், ...

Read More »

மெல்பேர்ண் தைப்பொங்கல் விழா

a1

தைப்பொங்கல் விழா நிகழ்வொன்று மெல்பேர்ண் மேற்கு வாழ் தமிழர்களால் கடந்த 14-01-2017 அன்று விக்ரோரியா Ashcroft park வில்லியம்ஸ் லேண்டிங் என்னுமிடத்தில் காலை 10.00 மணியிலிருந்து பிற்பகல் 3.00 மணிவரை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மக்களால் நாடு மற்றும் சமய வேறுபாடுகளை கடந்து மிகவும் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டுள்ளது. காலை 10.00 மணிக்கு மண்பானை வைத்து கலாச்சார முறைப்படி ஆரம்பித்த பொங்கல் நிகழ்வு “விந்தம்” தமிழ்ப்பாடசாலை மாணவர்களது வணக்க நிகழ்வுகளுடன் சிறப்பாக ...

Read More »

அவுஸ்ரேலியாவின் ஐந்து மாநிலங்களிலும் எழுச்சியுடன் மாவீரர் நாள்

heros-day

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பேர்த், பிரிஸ்பன், அடேலையிட், மெல்பேர்ண் பெருநகரங்களில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு உணர்வெழுச்சியுடன் நினைவுகூர்ந்தனர். சிட்னியில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் அப்துல் ஜபார் கலந்து சிறப்புரையாற்றினார். தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் இம்முறை எழுச்சியுடன் சிறப்பான முறையில் நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. மாவீரர் நினைவெழுச்சிநாள் – 2016 – ஒஸ்ரேலியா- மெல்பேர்ண் தமிழீழத்தாய்த் திருநாட்டின் விடுதலைக்காக களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ...

Read More »

மெல்பேர்ணில் உணர்வுடன் நடந்தேறிய தியாகதீப கலைமாலை நிகழ்வு-2016

unnamed-17

பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிருநாட்களாக நீர்கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து 26-09-1987அன்று ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 29வது ஆண்டு நினைவுதினமும் கலைமாலை நிகழ்வும் ஒஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரில் 30-09-2016 வெள்ளிக்கிழமையன்று சென்யூட்ஸ் மண்டபத்தில் மாலை 6.00 மணியளவில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் 26-09-2001 அன்று புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான்வீதியில் சிறிலங்காப்படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ...

Read More »

இன்று நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நடன நிகழ்வு

naaddiyam 2016-08-22 001922

நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நடன நிகழ்வு  இன்று செப்டெம்பர் மாதம் 4ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம் பெறுகின்றது . அனைவரையும் அன்போடு அழைக்கின்றார் நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்.

Read More »

மெல்பேணில் ”தமிழர் விளையாட்டு விழா 2016” பற்றிய செய்தி

Kittu Tamil Sports 2016_Melb 14

மெல்பேணில் தமிழர் விளையாட்டு விழா நிகழ்வு, இவ்வாண்டும் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டுள்ளது. மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவுநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் இந்த தமிழர் விளையாட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 10 – 01 – 2016 அன்று நடைபெற்றது ஒஸ்ரேலியாவின் விக்டோறியா மாநிலத்தின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் மெல்பேர்ண் நகரில் ஈஸ்ட் பேவுட் றிசேவ் மைதானத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. காலை 9.00 மணிக்குத் ...

Read More »