குமரன்

ஆண் துணை இல்லாமல் பெண்கள் பயணிக்க தடை – தலிபான்கள் அதிரடி உத்தரவு

ஹைஜாப் அணியாத பெண்களை ஓட்டுநர்கள் வாகனங்களில் அனுமதிக்கக்கூடாது என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது பயணம் செய்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து தலிபான்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:- ஆப்கானிஸ்தானில் 72 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது. பயணம் செய்யும் பெண்கள் கண்டிப்பாக ஹைஜாப் அணிய வேண்டும். ...

Read More »

மானத்துடன் உண்ணும் பழையது அமிர்தம்

ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா, அமைதியாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி விடுங்கள் என செல்வராகவன் பதிவு செய்துள்ளார். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, இரண்டாம் உலகம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிவர் செல்வராகவன். தனுஷ் அண்ணாகிய செல்வராகவன் தற்போது ராக்கி பட இயக்குனரின் சாணிக்காகிதம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் செல்வராகவன் இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் “ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா, அமைதியாய் புன்னகைத்து  விட்டு அங்கிருந்து வெளியேறி விடுங்கள் ! அவமானத்தை சகித்துக் கொண்டு ...

Read More »

ஆட்கடத்தலுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சின் தலைமையின் கீழ்….

எதிர்வரும் ஆண்டில் இலங்கையில் ஆட்கடத்தல் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு மேலும் பல செயற்திறன்மிக்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணி அறிவித்துள்ளது. ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு புலனாய்வு அதிகாரிகள் மற்றும் புலனாய்வு சேவைகளுடன் ஒருங்கிணைந்த உயர் ரக நிறுவன பொறிமுறையை நிறுவும் நோக்கில், அமைச்சரவையினால் இவ்வாண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் தலைமைத்துவனது, நீதி அமைச்சிலிருந்து பாதுகாப்பு அமைச்சிற்கு மாற்றப்பட்டது. ;இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்ட சுற்றறிக்கையின் ஊடாக, குற்றப் ...

Read More »

“ஒரே நாடு, ஒரே சட்டம்” -கருத்துக்களை கேட்டறிந்தது

“ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணி, மத்திய மாகாண மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தது. நேற்று (25) முற்பகல் மாத்தளை மாவட்டச் செயலகத்துக்கும் பிற்பகல் கண்டி மாவட்டச் செயலகத்துக்கும் வருகை தந்த மாகாண மதத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள், செயலணியிடம் கருத்துக்களைத் தெரிவித்தனர். வருகை தந்திருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்த குழுவின் தலைவர் சங்கைக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர், இந்த விடயத்தில் ஜனாதிபதியின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டுள்ளதுடன், குறித்த காலத்துக்கு முன்னதாகவே குழுவின் அறிக்கையை ...

Read More »

இனப்படுகொலையில் இருந்து தப்ப மக்கள் வெளியேறுகிறார்கள், காக்க வேண்டியது ஆஸ்திரேலியாவின் கடமை’- தமிழ் செயற்பாட்டாளர்

“(ஆஸ்திரேலியாவின்) இந்த உணர்வற்ற செயலை கேட்பதற்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இஇமபடுகொலையில் இருந்து தப்ப மக்கள் வெளியேறுகிறார்கள். இம்மக்கள் நிஜமான மனித உயிர்கள், வீடியோ கேம் அல்ல. அவர்களுக்கு உதவ வேண்டியது, ஆபத்தான சூழலுக்கு திருப்பி அனுப்பாமல் இருக்க வேண்டியது ஆஸ்திரேலியாவின் கடமை. இந்த கொடூரமான கொள்கைகள் முடிவுக்கு வர வேண்டும்,” என பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தமிழ் செயற்பாட்டாளர் தமிழ் கார்டியன் ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார். தமிழர்கள் தொடர்ந்து இலங்கையிலிருந்து வெளியேறி வரும் நிலையில் இப்படியொரு பிரச்சார செயலை ஆஸ்திரேலியா இலங்கையுடன் இணைந்து ...

Read More »

இனியொரு தடவை கடற்கோள் சூழ்ந்தால் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்!

பதினேழு வருடங்களுக்கு முன்னால், 2004 டிசெம்பர் 26ஆம் திகதி இந்து சமுத்திரக் கரையோர நாடுகளைக் கடற்கோள் சூழ்ந்ததில் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருந்தனர். இலங்கையில் மட்டும் முப்பத்திஐயாயிரம் பேர் வரையில் கொல்லப் பட்டிருந்தனர். இனியொரு தடவை கடற்கோள் சூழ்ந்தால் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். கடற்கோள் நினைவுநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், இயற்கைப் பேரிடரான கடற்கோளைத் தடுக்க முடியாது ...

Read More »

வாழ்க்கையில் போராடும் இளைஞரை தான் காதலிக்க விரும்புகிறேன்

பெண்கள் குறித்து சமூகம் கொண்டிருக்கும் பொதுப்பார்வையை கேள்வி கேட்கும், வலிமையான பெண் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதாக ஹார்னாஸ் சாந்து தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 12-ம் தேதி இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற உலக பிரபஞ்ச அழகி போட்டியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஹர்னாஸ் கவுர் சாந்து வெற்றி பெற்றார். அவர், தான் வாழ்க்கையில் போராடும் இளைஞரை தான் காதலிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அவர் கொடுத்த பேட்டியில் கூறியிருப்பது:- நான் ஒரு பணக்காரரை காதலிப்பதை விட வாழ்க்கையில் முன்னேற ...

Read More »

மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் ஏவியது நாசா

இந்த தொலைநோக்கியால் நட்சத்திரங்கள் மற்றும் கிரக அமைப்புகள் எவ்வாறு உருவாகின மற்றும் அண்ட சராசரம் குறித்த விரிவான தகவல்களை சேகரிக்க முடியும். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் கனேடிய விண்வெளி நிறுவனம்  இணைந்து உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த விண்வெளி அறிவியல் தொலைநோக்கியான ‘ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி’யை உருவாக்கி உள்ளன. பூமி தனித்துவமானதா? பூமியைப் போன்ற கிரக அமைப்புகள் இருக்கிறதா? பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தான் இருக்கிறோமா? போன்ற அடிப்படை கேள்விகளுக்கு பதில் தேடுவதற்கான ஆய்விற்கு, வானியலாளர்கள், ...

Read More »

ஐ.நா வரவு – செலவுத்திட்டத்தில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் …

ஐக்கிய நாடுகள் சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டம் தொடர்பான விவாதம் நடைபெற்றுவருகின்றது. இவ்வரவு, செலவுத்திட்டத்தில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்காக ஒதுக்கப்படவுள்ள நிதி மற்றும் ஆளணியில் குறைப்பைச் செய்வதற்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய பாதுகாப்புச்சபை உறுப்புரிமை நாடுகளும் இலங்கையும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. இருப்பினும் அவற்றின் முயற்சிகளைத் தோற்கடித்து மனித உரிமைகள்சார் செயற்திட்டங்களுக்கு உரியவாறு நிதியொதுக்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்று ஐ.நா உறுப்பு நாடுகளிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ...

Read More »

யாழில் சிலை கடத்தலில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது

யாழில் சிலைகளை கடத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர்கள் இருவர் காங்கேசன்துறை காவல் துறையால்  கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 09ஆம் திகதி காங்கேசன்துறை குமார கோவில் பிள்ளையார் சிலை காணாமல் ஆக்கப்பட்டு இருந்தது. அது தொடர்பில் , கோவில் நிர்வாகத்தினரால் காங்கேசன்துறை காவல் துறை  நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சில நாட்களில் தெல்லிப்பளை , பலாலி உள்ளிட்ட வலி வடக்கில் உள்ள நான்கு ஆலயங்களில் பிள்ளையார் சிலை உள்ளிட்ட சிலைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை காவல் துறைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. தொடர்ந்து இந்து ...

Read More »