குமரன்

ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் அடுத்த பரிணாமம்

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியின் வரிசையில் இருக்கும் நடிகையின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை படங்களில் தோன்றி தமிழ் ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ’கலியுகம்’ என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார். இப்படம் நவீன தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. இப்படத்தை ஆர்.கே இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக பிரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ்.ராமகிருஷ்ணா தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகர் கிஷோருடன் புதுமுக நடிகர்கள் நடிக்கிறார்கள். இயக்குனர் ப்ரமோத் சுந்தர் இயக்கி, கே ராம்சரண் ஒளிப்பதிவு செய்து ...

Read More »

20வது திருத்த சட்டத்தின் மூலம் ராஜபக்ச குடும்பத்தினருக்கே நன்மை

20வது திருத்த சட்டத்தின் மூலம் ராஜபக்ச குடும்பத்திற்கே பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றது ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ண் தெரிவித்தார். இன்று (28) நுவரெலியா – இராகலை சென்.லெனாட்ஸ் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவிக்கின்ற பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணனுக்கு ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து ஒரு தொகை பொருட்கள் (2.12.2021) ...

Read More »

டொலர் பற்றாக்குறைக்கு தீர்வு கூறிய ரணில்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். டொலர் பற்றாக்குறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக தொழில்கள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் வேலைகள் இழக்கப்படுவதாகவும் மற்றும் விவசாயிகள் சிக்கித் தவிப்பதாகவும் தெரிவித்த அவர், இவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். கொவிட் தொற்றுநோய் இருந்த போதிலும், பல நாடுகள் 2020 – 2021 ஆண்டுகளில் பொருளாதார முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன என்று அவர் கூறினார். சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று உதவி பெறுவது அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்று ...

Read More »

உள்ளூராட்சி சபைகளில் நடப்பதென்ன?

கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களின்போது காரைநகரில் ஒரு சுயேச்சைக் குழு போட்டியிட்டது. அப் பிரதேசத்தில் காணப்படும் சமூக வேறுபாடுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட சில சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சுயேட்சைக்குழுவாக அது தேர்தலில் போட்டியிட்டது. எனினும் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவான தமிழ்தேசிய நிலைப்பாட்டை அக்கட்சி வெளிப்படுத்தியது.தேசிய விடுதலை என்பது சமூக விடுதலையையும் உள்ளடக்கியதே என்பதனை அந்த தேர்தல் அறிக்கை தெளிவாக வெளிப்படுத்தியது. தேர்தலில் அச்சுயேச்சைக் குழு மூன்று ஆசனங்களைப் பெற்றது.எனினும் பிரதேச சபையை கைப்பற்றுவதற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஏனைய கட்சிகளுடன் பேரம் பேச ...

Read More »

நோபல் பரிசு பெற்ற தென்ஆப்பிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்

நிறவெறி எதிர்ப்பின் அடையாளமான நெல்சன் மண்டேலாவின் சமகாலத்தில் கருப்பின மக்கள் மீதான அடுக்கு முறைகளுக்கு எதிராக அகிம்சை வழியில் போராட்டம் நடத்தியவர்களில் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு குறிப்பிடத்தக்க நபர் ஆவார். தென்ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டுட்டு நேற்று காலமானார். அவருக்கு வயது 90. நிறவெறி எதிர்ப்பின் அடையாளமான நெல்சன் மண்டேலாவின் சமகாலத்தில் கருப்பின மக்கள் மீதான அடுக்கு முறைகளுக்கு எதிராக அகிம்சை வழியில் போராட்டம் நடத்தியவர்களில் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு குறிப்பிடத்தக்க நபர் ஆவார். ...

Read More »

உள்ளம் உருகுதய்யா… சூர்யா படத்தின் அடுத்த பாடல்

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் 2வது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘வாடா தம்பி…’ என்ற பாடல் ஏற்கனவே ...

Read More »

பேராயர் டெஸ்மண்ட் டுட்டு நல்லிணக்கத்துக்கும் அயராது உழைத்தவர்!

பேராயர் டெஸ்மண்ட் டுட்டு அவர்களின் மறைவைக் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த கவலை கொள்கிறது எனவும், அவர் தென்னாபிரிக்காவில் இனவாதத்திற்கு எதிராகவும் உலகில் அனைத்து அநீதிகளுக்கு எதிராகவும் போராடியவர் மட்டுமல்லாது சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்குமாகவும் அயராது உழைத்தவர் என தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது. உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றிய அவர் நீதியும் கருணையும் ஒன்றுக்கொன்று முரணானவையல்ல: பிரிக்க முடியாத முழுமையின் இரு அங்கங்கள் என்பதைக் காண்பித்தார். இயேசுவின் பிறப்பை உலகம் நினைவு கூரும் இவ் வேளையில் நிகழ்ந்த இவரது ...

Read More »

யாழிலிருந்து சிலைகளை கடத்தியவர்கள் விளக்கமறியலில்

வலிகாமம் வடக்கில்  உள்ள கோவில் விக்கிரகங்களை கடத்தி விற்பனை செய்து வந்த இருவரையும், எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார். வலிகாம் வடக்கு பிரதேசத்தில் உள்ள கோவில்களில் இருந்த பிள்ளையார் உள்ளிட்ட கடவுள் விக்கிரகங்களைக் கடத்தி கொழும்பில் விற்பனை செய்த குற்றச்சாட்டில், கீரிமலை – நல்லிணக்கபுரம் மற்றும் புத்தூர் – நவக்கிரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர், கடந்த 24ஆம் திகதியன்று, காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கடந்த 09ஆம் திகதி முதல் 23ஆம் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் ஒமைக்ரானுக்கு முதல் பலி

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1,999 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் 3 பேர் பலியாகி உள்ளனர். ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மேற்கு சிட்னி முதியோர் பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருந்த 80 வயதுள்ள முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு ஒமைக்ரான் உறுதியானது. இதையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று பலியானார். இது ஆஸ்திரேலியாவில் ஒமைக்ரானக்கு ஏற்பட்ட முதல் ...

Read More »

அறிவியல் எழுத்தாளர் ராஜாஜி

தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரும் ஒருவர். ராமாயணக் கதையைக் குழந்தைகளும் படிக்கும் வகையில் அவர் எழுதிய ‘சக்கரவர்த்தித் திருமகன்’ புத்தகத்துக்கு 1958-ல் சாகித்ய விருது கிடைத்தது. பாரதக் கதையை ‘வியாசர் விருந்து’ என்ற பெயரிலும் உபநிடதங்களின் சாராம்சத்தை ‘உபநிஷதப் பலகணி’ என்ற தலைப்பிலும் அவர் எழுதியிருக்கிறார். தவிர, அறிவியல் பார்வையை வளர்க்கும் வகையில் ‘திண்ணை ரசாயனம்’ என்ற புத்தகத்தையும் அவர் எழுதியுள்ளார். அதே தலைப்பில் ‘கல்கி’ இதழில் தொடராக வெளிவந்த ஏழு கட்டுரைகள் 1946-ல் புத்தகமாக வெளிவந்தன. ஆங்கிலம் தெரிந்த ...

Read More »