Home / emurasu

emurasu

அவுஸ்திரேலியாவில் தமிழ்ப்பற்றாளர் பொன். சத்தியநாதன் என்ற பெருமனிதன் மறைவு!

21740172_1720566351571583_5992720759568483225_n

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் வாழ்ந்துவந்த தமிழ்ப்பற்றாளர் வைத்திய கலாநிதி பொன். சத்தியநாதன் வெள்ளிக்கிழமை ( 15 – 09 – 2017 ) அன்று சாவடைந்தார். இவர் தமிழரின் வாழ்வுக்காக தமிழ்மொழி பாதுகாக்கப்படவேண்டும் அதன் மூலம் சாதி சமயம் கடந்த தமிழர் நெறியை அனைவரும் போற்றி பாதுகாக்கவேண்டும் என தனது வாழ்நாளை அதற்காகவே அர்ப்பணித்து பணிசெய்து வந்த ஒரு பெருமனிதனாக வாழ்ந்து மறைந்துள்ளார். தமிழரின் தொன்மைமிக்க வள்ளுவரின் குறள்களை நெறியாகக் கொண்டு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வு

AG1A4453

பாரததேசத்திடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து முப்பதுநாட்கள் உண்ணாநோன்பிருந்து 19-04-1988 அன்று ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 29-வது ஆண்டு நினைவு தினமும் தாயக விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக உழைத்து சாவடைந்த நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூரும் நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வும் உணர்வுபூர்வமாக மெல்பேர்ணில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அவுஸ்திரேலியாவில் தமிழ்த்தேசியப் பரப்பிலும் தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்திலும் உன்னதமான பணிகளை முன்னெடுத்து தமிழீழ தேசத்தின் கனவுகளோடு சாவடைந்து தமிழீழ தேசியத் ...

Read More »

ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் நூல் வெளியீடு

Nalini's Book Release_Melb 02

முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான திருமதி நளினி முருகன் அவர்களின் முழுமையான அனுபவங்களை உள்ளடக்கியதான எழுத்தாளர் திரு பா. ஏகலைவன் எழுத்துருவாக்கம் செய்த “ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்” என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டுவிழா கடந்த 17-04-2017 திங்கட்கிழமையன்று மாலை 4.00 மணியளவில் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ணில், டன்டினோங் நகரத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வை தமிழ் ஏதிலிகள் கழகம் ஏற்பாடு ...

Read More »

அவுஸ்திரேலிய பப்புவா நியுகினி தடுப்பு முகாமில் மாவீரர் நாள் நிகழ்வு

img_0340

அவுஸ்திரேலிய அரசால் பப்புவா நியுகினி  தீவில் தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழர்களும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொண்டுள்ளார்கள். மிகவும் நெருக்கடியான சூழலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் என பலர் விடுதலை போராட்டத்தில் மரணித்துள்ளதாகவும் அவர்களை நினைவுகூருகின்ற சந்தர்ப்பம் கிடைத்தமை நல்ல விடயம் எனவும் அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் சமூக வலைத் தளங்கள் ஊடாக தமது ஆதங்கங்களை பகிர்ந்துகொண்டார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை 27 – 11 – ...

Read More »

அவுஸ்திரேலியாவில் “தியாகத் திருவொளிகள்” இசைத்தொகுப்பு வெளியீடு!

thiruvolikal

அவுஸ்திரேலிய தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் வெளியீடாக “தியாகத் திருவொளிகள்” என்ற பாடற்தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றி அனுப்பிவைக்கப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு: எமது அன்புக்குரிய தமிழ் மக்களே காலப்பெருவெளியின் வரலாற்றில் உயிர்ப்பான நிலைபெற்றுவிட்ட, எமது மாவீரர்களின் தியாகங்களே, எமது மக்களின் விடுதலைக்கான பாதைகளை வழிப்படுத்தி நெறிப்படுத்தி நிலைப்படுத்தி வைத்திருக்கின்றது. தங்களது உன்னதமான இன்னுயிரை எமது மக்களின் விடுதலைக்காக வித்தாக்கி மறைந்துபோன மாவீரர்களின் நினைவுகளில் நிறைந்திருக்கும் இன்றைய நாளில், அவர்கள் கனவுகளை ...

Read More »

மெல்பேணில் ”தமிழர் விளையாட்டு விழா 2016” பற்றிய செய்தி

Kittu Tamil Sports 2016_Melb 14

மெல்பேணில் தமிழர் விளையாட்டு விழா நிகழ்வு, இவ்வாண்டும் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டுள்ளது. மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவுநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் இந்த தமிழர் விளையாட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 10 – 01 – 2016 அன்று நடைபெற்றது ஒஸ்ரேலியாவின் விக்டோறியா மாநிலத்தின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் மெல்பேர்ண் நகரில் ஈஸ்ட் பேவுட் றிசேவ் மைதானத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. காலை 9.00 மணிக்குத் ...

Read More »

பரமற்றா நகரில் தமிழரின் பொங்கல் விழா

IMG_4853

தூரத்தே நின்று வாசலை நோக்கும்போதே வாழைமரங்கள் இரண்டு இலைகளை அசைத்து வாருங்கள் இங்கே என்று சைகை காட்டியது. என்ன இது வாழைகள் என்றெண்ணி கிட்டே நகர்ந்தால் அதன்கீழ் அழகிய கோலம் கோலத்தின் நடுவே அழகுற அமைந்த நிறைகுடமும் குத்து விளக்கும் ஆச்சரியமூட்டி மனதை நிறைத்து பொங்கல்விழா என்றுகட்டியம் கூறியது. நிற்குமிடம் தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசமா என்றொரு எண்ணத்தை ஊட்டியது. அப்போதுதான் தெரிந்தது இது நம்மவர் நிகழ்த்தும் பொங்கல்விழா என்று. இன்சொல் ...

Read More »

ஒஸ்ரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வருடாந்த நத்தார் வேண்டுதல் 2015

radiothon-ad

ரேடியோதொன் நிதிசேகரிப்பு நிகழ்வு, ஈழத்தில், வடகிழக்கு மாகாணத்தில் மிக மோசமாக மன அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டநிலையில் காணப்படும் எங்கள் தமிழ் உறவுகளின் அவலத்தைப் போக்கவும்,அவர்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்து, அந்த தமிழ் உறவுகளின்வளமான வாழ்வுக்கு வழிசமைக்கும் நோக்கோடு 23வதுமுறையாக ஓஸ்ரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் மேற்கொள்ளப்படும் “மீள்குடியேற்றப் பட்டிருக்கும் பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டத்திற்கு” ஆதரவாக விக்டோரிய ஈழத்தமிழ்சங்கத்தின் 3CR தமிழ்க்குரல், 24 மணிநேர இன்பத்தமிழ் ஒலிவானொலிகளின் ...

Read More »

விசுவமடு கற்பழிப்பு வழக்கு! இராணுவத்தினர் 4 பேருக்கு சிறை (பின்னனி தகவல்கள்)

jaffna_court_002

விசுவமடுவில் 2009ம் ஆண்டு பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டமை மற்றும் வயோதிப பெண் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை சம்பந்தமாக இராணுவத்தினரின் மேல் சுமத்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு, ஒரு எதிரி இல்லாத நிலையில் இன்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம் இளம்செழியனினால் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த வழக்கில் எதிரிகள் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருந்ததுடன், மற்றுமொரு இராணுவம் தலைமறைவாகியுள்ள நிலையில் இந்த வழக்கு இடம் பெற்றுவந்தது. ...

Read More »

வடக்கில் முதலமைச்சர் நிதியத்தை திறக்க முடியவில்லை: முதலமைச்சர் ஆதங்கம்!

IMG_3982-e1443885449770

வடக்கில் முதலமைச்சர் நிதியத்தை திறக்க முடியவில்லை. வடமாகாணத்தின் நிதியம், கொடைகள் மத்திய வங்கியின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை(03) மன்னார் உள்ளக விளையாட்டு அரங்கை திறந்து வைத்தபின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் நான் போதைப் பொருள் தடுப்புக் கூட்டமொன்றுக்கு கொழும்பு சென்றிருந்தேன். நண்பரும் சட்டத்தரணியுமான அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களுடன் கூட்டத்தில் கலந்து ...

Read More »